ஆட்டமிழந்த  விரக்தியில் கதவை ஓங்கி குத்திய விராட் கோலி | காணொளி

Date:

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, இங்கிலாந்து அணிக்கு எதிரான ஓவல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 96 பந்துகளுக்கு 44 ஓட்டங்கள் குவித்து அவுட்டானார். இந்நிலையில் அவர் பெவிலியன் திரும்பியதும் அவுட்டான விரக்தியில் உடை அணியும் அறையின் கதவை ஓங்கி குத்தியுள்ளார் கோலி.
மிகவும் நேர்த்தியாக இன்னிங்ஸை அணுகிய கோலி மூன்று இலக்க ஓட்டங்களை  குவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆடுகளமும் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்த காரணத்தினால் அது கைக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. கோலியும் அந்த நம்பிக்கையுடன் விளையாடினார்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக கோலியின் பேட்டில் பட்ட பந்து ஸ்லிப் ஃபீல்டரின் கைகளில் தஞ்சமடைந்தது. அந்த ஓவரை மொயின் அலி வீசியிருந்தார். கோலி பந்து ஸ்பின்னாகும் என எதிர்பார்த்து பேட்டை வைக்க, பந்து பெரிய அளவில் சுழலாத காரணத்தினால் ஆட்டமிழந்துள்ளார்.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...