இரட்டை கோபுர தாக்குதல் குறித்து இலங்கை வௌியிட்டுள்ள அறிக்கை!

Date:

9/11 தாக்குதல் இடம்பெற்று 20வது ஆண்டு நிறைவில் அமெரிக்க அரசாங்கத்துடனான ஒற்றுமையை வௌிப்படுத்தும் வகையில் இலங்கை வௌிநாட்டு அமைச்சு அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

ஐக்கிய அமெரிக்கா மற்றும் ஏனைய நாடுகளைச் சேர்ந்த பல அப்பாவி மக்களின் உயிர் மற்றும் உடலுறுப்புக்களின் இழப்புக்கு வழிவகுத்த ஐக்கிய அமெரிக்காவின் மீது நடாத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெற்று 20 ஆண்டுகள் நிறைவை 2021 செப்டம்பர் 11ஆந் திகதியாகிய இன்றைய தினம் குறித்து நிற்கின்றது.

ஐக்கிய அமெரிக்காவின் சமகால வரலாற்றில் மிகவும் வேதனையான நிகழ்வை அவர்கள் நினைவுகூரும் இத் தருணத்தில், அமெரிக்க மக்கள் மற்றும் அரசாங்கத்துடனான தனது ஒற்றுமையை இலங்கை அரசாங்கம் வெளிப்படுத்துகின்றது. கொடூரமான இந்தத் தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட மற்றும் உயிர் பிழைத்த அனைவருக்கும் அஞ்சலி செலுத்துவதற்கு இலங்கை விரும்புகின்றது.

நீண்ட காலமாக பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டு, அதன் சவாலை வெற்றிகரமாக எதிர்கொண்ட ஒரு நாடு என்ற வகையில், பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் மற்றும் வெளிப்பாடுகளிலும் ஒழிப்பதற்காக அனைத்து நாடுகளும் ஒன்றிணைவதற்கான தேவையை இலங்கை அரசாங்கம் மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தையும் கிடையாது: ஈரான் திட்டவட்டம்

போர் நிறுத்தம் தொடர்பாக, அமெரிக்காவுடன் எந்தவிதமான சமரசப் பேச்சுவார்த்தையும் நடத்தப்போவதில்லை என...

அமெரிக்க – இஸ்ரேல் கூட்டுச் சதிக்கு எதிராக தமிழகத்தில் வெடித்த எதிர்ப்பு: அனைத்துக் கட்சித் தலைவர்கள் ஓரணியில்!

இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலால் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி...

உலக அமைதிக்காக விசேட துஆப் பிரார்த்தனை: அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள்!

புனித ரமழான் மாதத்தில் உலகெங்கும், குறிப்பாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி...

எரிபொருளை முறையற்ற வகையில் களஞ்சியப்படுத்தினால் கடும் நடவடிக்கை

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமையைக் காரணமாகக் கொண்டு,...