இராஜாங்க அமைச்சரின் செயல் குறித்து தேர்தல் ஆணைக்குழுவின் நிலைப்பாடு!

Date:

சிறை நிர்வாகம் மற்றும் கைதி மறுவாழ்வு இராஜாங்க அமைச்சர் வெலிக்கடை மற்றும் அனுராதபுரம் சிறைச்சாலைகளுக்கு சென்று மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து தேர்தல் ஆணையம் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளது.

இன்று (17) நடைபெற்ற தேர்தல் ஆணைக்குழு கூட்டத்தில் இது தொடர்பாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த நடவடிக்கை சட்டத்தின் ஆட்சிக்கு சவாலாக இருப்பதோடு, பொதுப் பிரதிநிதிகள் மீதான மக்களின் நம்பிக்கையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என்றும் ஆணைக்குழு கூறியுள்ளது.இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை வைக்க தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இதேவேளை, வெலிக்கடை மற்றும் அனுராதபுரம் சிறைச்சாலைகளில் இடம்பெற்ற சம்பவங்களுக்கு பொறுப்பேற்று இராஜாங்க அமைச்சர் லோஹான் ரத்வத்தே கடந்த 15 ஆம் திகதி தனது பதவியை இராஜினாமா செய்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...