இலங்கை உள்ளிட்ட 15 நாடுகளுக்கான தடை நீக்கம்!

Date:

இலங்கை உள்ளிட்ட 15 நாடுகளுக்கு விதித்திருந்த சுற்றுலா தடையை நாளை (12)முதல் நீக்குவதாக ஐக்கிய அரபு இராச்சியம் அறிவித்துள்ளது.

இதற்காக உலக சுகாதார ஸ்தாபனத்தின் அனுமதி பெற்ற கொரோனா தடுப்பூசிகளை இரண்டு தடவையும் பெற்றிருத்தல் வேண்டும்.இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 15 நாடுகளுக்கு இந்த தடை விதிக்கப்பட்டிருந்தது.இதேவேளை, முழுமையான தடுப்பூசிகளை பெற்றுக் கொண்ட சுற்றுலாப் பயணிகளை பெங்கொக்கிற்குள் அனுமதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இந்த அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.கொவிட்-19 பரவலை அடுத்து அந்த நாட்டு சுற்றுலாத்துறையை மீள கட்டியெழுப்பும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக பெங்கொக் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஆட்பதிவு திணைக்கள அலுவலகங்கள் நாளை மூடல்

ஆட்பதிவு திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் மாகாண அலுவலகங்களில் வழங்கப்படும் ஒரு...

புதிய திட்டங்களுடன் மக்கள் பணியை அர்ப்பணிப்புடன் முன்னெடுப்போம்- ஜனாதிபதி செயலாளர்

புதிய கருத்துக்கள் மற்றும் திட்டங்களுடன் ஜனாதிபதியின் மக்கள் நலன் சார்ந்த வேலைத்திட்டங்களை...

முன்னாள் எம்.பி. சந்தன கத்ரியாராச்சி கைது!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன கத்ரியாராச்சி கொழும்பு குற்றப் பிரிவினரால் (CCD)...