இலங்கை மற்றும் தென் ஆப்ரிக்கா இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி இன்று!

Date:

இலங்கை மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று (04) நடைபெறவுள்ளது.

கொழும்பு ஆர். பிரேமதாஸ (கெத்தாராம) மைதானத்தில் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் ஆரம்பமாகவுள்ள இந்தப்போட்டி, இரவு -பகல் ஆட்டமாக நடைபெறவுள்ளது.முதல் போட்டியில் விளையாடிய இலங்கை அணி வீரர்களே இன்றைய போட்டியிலும் விளையாடவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, முதல் போட்டியில் உபாதைக்குள் தென் ஆபிரிக்க அணித் தலைவர் டெம்பா பவுமா, இலங்கையுடனான ஒருநாள் சர்வதேச தொடரிலிருந்து விலகியுள்ளார்.இந்நிலையில், இன்றைய போட்டியில் தென் ஆபிரிக்க அணிக்கு கேஷவ் மஹாராஜ் தலைவராக செயற்படவுள்ளார்.

மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டித் தொடரில் இலங்கை அணி 1-0 என்ற அடிப்படையில் முன்னிலையில் உள்ளது.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...