கொரோனா வைரஸின் உருமாற்றம் பெற்ற ‘மியு’ கொரோனா குறித்து உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை செய்துள்ளது.சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. இதற்கு ஒரே தீர்வாக தடுப்பூசி கருதப்படுகிறது.
இதற்கிடையில் உலகின் பல்வேறு இடங்களில் உருமாறிய டெல்டா வகை கொரோனா கண்டறியப்பட்டது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தற்போது மியு (MU) B.1.621 என்று உருமாற்றம் பெற்றுள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கைவிடுத்துள்ளது.
இந்த உருமாற்றம் பெற்ற மியு வகை கொரோனா வைரஸ் கொலம்பியாவில் முதன்முதலில் கண்டறியப்பட்டதாகவும் தற்போது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளிலும் இந்த உருமாற்றம் பெற்ற கொரோனா கண்டறியப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டாலும் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும் அதிக ஆபத்தான இந்த மியு வகை கொரோனா வைரஸ் குறித்து கண்காணித்து வருவதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.