கொரோனாவிலிருந்து மீண்டவர்களிற்கு மருத்துவர்கள் வழங்கியுள்ள முக்கிய அறிவுரை

Date:

கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் கடும் உடல்உழைப்பில் அல்லது உடற்பயிற்சிகளை செய்யக்கூடாது என மருத்துவநிபுணர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
அவர்கள் சில வாரங்கள் எச்சரிக்கையுடன் இருந்த பின்னரே மீண்டும் தங்கள் வழமையான நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும் என மருத்துவநிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
பெருமளவானவர்கள் அல்பா அல்லது டெல்டா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள மருத்துவ நிபுணர்கள் இதிலிருந்து மீண்டவர்கள் நீண்டகால பாதிப்புகளை எதிர்கொள்ளக்கூடும் என தெரிவித்துள்ளனர்.
அசாதாரண சோர்வு,கவனம் செலுத்துவதில் சிரமம், உடல்வலிகள் குறிப்பாக மூட்டுவலி ஆர்வமின்மை போன்ற அறிகுறிகளை அவர்கள் வெளிப்படுத்துவார்கள் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
கொரோன நோயாளிகளை சமூகம் நடத்தும் விதம் காரணமாக சில நோயாளிகள் மன அழுத்தத்திற்கு உள்ளாககூடும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த அறிகுறிகள் மூன்று முதல் ஐந்துவாரத்திற்கு தொடரக்கூடும் என மருத்துவநிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இதன் காரணமாக கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் உடலை வருத்தும் நடவடிக்கைகளை தவிர்த்துக்கொள்ளவேண்டும்,கடுமையான செயற்பாடுகளில் ஈடுபடக்கூடாது என ஆலோசனை வழங்கியுள்ள மருத்துவர்கள் அதேவேளை குருதிஉறைவு போன்றவை காரணமாக முழுமையாக படுக்கையில் ஓய்வில் இருக்கவேண்டியதில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
நோயாளிகள் கொரோனாவிலிருந்து மீளும்போது அவர்களது நுரையீரல் இறுக்கமானதாகிவிடுகின்றது இதனால் சுவாசிப்பதில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன என மருத்துவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Popular

More like this
Related

சுரேஷ் சலேயின் உடல் ஆரோக்கியம் மோசமடைந்து வருவதால் ஜனாதிபதிக்கு கடிதம்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயின் ஆரோக்கிய நிலைமை...

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் நாளை புத்தளத்தில் இஸ்லாமிய மாநாடு!

இலங்கையில் பல தசாப்த காலங்களாகத் தொடர்ந்து இஸ்லாமியப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு...

நாட்டை சுற்றியுள்ள கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை !

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த...

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் தூதுவருடன் அமைச்சர் நலிந்த சந்திப்பு

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) நல்லெண்ண தூதுவர் யோஹெய்...