கொவிட் – 19 வேலைத்திட்டத்தின் கீழ் 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை மேலதிகக் கடனாக பெற உடன்பாடு!

Date:

கொவிட் – 19 இற்கான தேசிய பிரயோகங்கள் மற்றும் தடுப்பூசி திட்டமிடல் போன்றவற்றை இயன்றளவு இலங்கையின் சனத்தொகையில் 60% வீதமானவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் அடிப்படை இலக்கை விரிவாக்குவதற்கு கொவிட் முகாமைத்துவத்திற்கான தேசிய செயலணி தீர்மானித்துள்ளது.

அதற்காக கொவிட் – 19 மூலோபாய தயார்படுத்தல்கள் மற்றும் பதிலளிப்புகள் வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கையில் கொவிட் 19 அவசர பதிலளிப்புக்கள் மற்றும் சுகாதாரத்துறையை தயார்படுத்தல் கருத்திட்டத்திற்காக 100 மில்லியன் அமெரிக்க டொலர் மேலதிகக் கடனை வழங்குவதற்கு உலக வங்கி உடன்பாடு தெரிவித்துள்ளது.

குறித்த மேலதிக தொகை, 14 மில்லியன் ஃபயிசர் தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்கும், தடுப்பூசி வழங்கும் பணிக்கு ஏற்புடைய ஏனைய செலவுகளுக்குமான நிதியிடலுக்காகத் திட்டமிடப்பட்டுள்ளது.அதற்கமைய, குறித்த மேலதிக நிதியிடல் வசதிகளைப் பெற்றுக்கொள்வதற்காக சுகாதார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: ‘தெமட்டகொட சமிந்த’விடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் அனுமதி!

பாதாள உலகக் குழுவின் முக்கிய தலைவரான கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்ட சம்பவம்...

கொவிட் காலத்தில் தன்னார்வத் தொண்டு செய்த இளைஞருக்கு இலவச ஹஜ் வாய்ப்பு.

கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் உயிரிழந்தவர்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யும் பணிகளில் தன்னார்வமாக...

சவூதி அரேபியா சென்றடைந்த இலங்கையின் முதல் ஹஜ் யாத்ரீகர்கள் குழு: தூதுவர் அமீர் அஜ்வத் வரவேற்பு.

2026-ஆம் ஆண்டுக்கான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக இலங்கையிலிருந்து புறப்பட்ட 325...

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற விஜய்க்கு நமல் ராஜபக்ஷ வாழ்த்து!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றியை பதிவு செய்தமைக்காக நடிகரும்,...