சந்தையில் அரிசி தட்டுப்பாடு தீவிரமடையும் – வியாபாரிகள் மற்றும் ஆலை உரிமையாளர்கள் எச்சரிக்கை!

Date:

அரிசி மீது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையை மாற்றாவிட்டால் சந்தையில் அரிசி தட்டுப்பாடு தீவிரமடையும் என அரிசி வியாபாரிகள் மற்றும் ஆலை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, கட்டுப்பாட்டு விலைக்கு அப்பால் அரிசியை விற்பனை செய்யும் அரிசி விற்பனையாளர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம் 100,000 ரூபாவாக உயர்த்தப்பட்டதால், அரிசியை விற்பதில் இருந்து சில வியாபாரிகள் விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அத்தோடு அரிசி சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படுவதால் நுகர்வோர் விவகார அதிகார சபை அரிசிக்கு அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து கடந்த 2 ஆம் திகதி விசேட வர்த்தமானி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.

ஒரு கிலோ நாட்டரிசியின் அதிகபட்ச சில்லறை விலை 98 ரூபாயாகவும், ஒரு கிலோ சம்பா அரிசி 103 ரூபாவாகவும் மற்றும் ஒரு கிலோ கீரி சம்பா 125 ரூபாவாகவும் விலை நிர்ணயிக்கப்பட்டது.அதைத் தொடர்ந்து, அவசர கால அதிகாரங்களின் கீழ் முன்னணி அரிசி ஆலைகளில் நுகர்வோர் விவகார அதிகார சபையினால் (CAA) கடந்த 22 ஆம் திகதி சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டு நுகர்வோர் விவகார சட்டத்தில் புதிய திருத்தங்கள் கொண்டு வரப்பட்டது.எனினும் புதிய சட்டத்தின்படி, நுகர்வோர் விவகார சட்டத்தின் கீழ் குற்றங்களுக்கான குறைந்தபட்ச அபராதம் 1,000 ரூபாயிலிருந்து 100,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர கைது!

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இரு குழுக்களுக்கு...

உண்மை முழுமையாக வெளிப்படும் வரை நீதிக்கான எமது போராட்டம் ஓயாது: கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை

2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள்,...

‘அமைதி பாதயாத்திரைக்கு ஆதரவளிப்பது கௌரவம்’: ஜனாதிபதி

இன்று (21) ஆரம்பமாகும் ‘அமைதி பாதயாத்திரைக்கு ‘ தனது முழுமையான ஆதரவை...

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் இடம்பெற்று 7ஆண்டுகள் நிறைவு

கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும்...