சீனியை கட்டுப்பாட்டு விலையில் விற்பனை செய்ய மொத்த விற்பனையாளர்களுக்கு வழங்க தீர்மானம் | வர்த்தக அமைச்சு

Date:

அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகத்தின் கீழுள்ள உணவுப் பொருட்கள் ஆணையாளர் திணைக்களத்தின் ஊடாக தனியார் துறையின் மொத்த விற்பனையாளர்களுக்கு சீனி விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, குறித்த சீனி அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையில் விற்பனை செய்ய உள்ளூர் மொத்த விற்பனையாளர்களுக்கு வழங்கப்படும் என்று வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்போது, வெள்ளை சீனி ஒரு கிலோ 117 ரூபாவுக்கும், சிவப்பு சீனி கிலோவொன்று 120 ரூபாவுக்கும் எந்தவொரு களஞ்சியசாலையிலும் இருந்து விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த செயற்பாடு தொடர்பில் மேலதிக விபரங்களை 0113 681 797 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்வதன் மூலம் பெற்றுக் கொள்ள முடியும்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...