சீமெந்து, பால் மா, எரிவாயு மற்றும் கோதுமை மாவின் விலை தொடர்பான இறுதித் தீர்மானம் திங்கட் கிழமை!

Date:

சீமெந்து, பால் மா, எரிவாயு மற்றும் கோதுமை மாவின் விலை தொடர்பான இறுதி தீர்மானம் எதிர்வரும் திங்கட்கிழமை மாலை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்படும் என்று நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

சந்தையில் குறித்த பொருட்களின் பற்றாக்குறை இன்னும் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.சந்தையில் பால் மா பற்றாக்குறை கடந்த ஜூலை மாதம் உருவாக்கப்பட்ட நிலையில் அரசாங்கம் பால் மா இறக்குமதியாளர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுத்திருந்தது.

ஆனால் சந்தையில் பால் மாவுக்கு இன்னும் தட்டுப்பாடு இருப்பதாக நுகர்வோர் முறைப்பாடு தெரிவித்து வருகின்றனர்.நுகேகொட ஜூபிலி தூண் பகுதியில் இன்று பால் மா வாங்குவதற்கு நீண்ட வரிசையில் மக்கள் இருந்ததாகவும், வாடிக்கையாளர்களுக்கும் கடையின் ஊழியர்களுக்கும் இடையே கடுமையான வார்த்தைப் பரிமாற்றம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அதேபோல், லாஃப் எரிவாயு பற்றாக்குறை இருக்கும் போது விலையை அதிகரிக்க அரசாங்கம் அனுமதி வழங்கி இருந்தது. எனினும் சந்தையில் லாஃப் கேஸ் பற்றாக்குறை இன்னும் நிலவுவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...