நேற்று (12) தனியார் தொலைகாட்சியில் ஜம்இய்யா Zoom ஊடாக நடாத்திய ஒரு கூட்டம் தொடர்பில் வெளியிடப்பட்ட ஒலிப்பதிவு தொடர்பாக ஜம்மியத்துல் உலமா விளக்கம் அளித்துள்ளது.
மேற்குறிப்பிட்ட கூட்டம் கடந்த 2021.07.07 ஆம் திகதி இந்நாட்டிலுள்ள முஸ்லிம் சிவில் அமைப்புகளுடன் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா Zoom ஊடாக நடாத்திய கூட்டமாகும். இதில் 24 முஸ்லிம் சிவில் அமைப்புகள் அழைக்கப்பட்டதோடு, 50 க்கும் அதிகமான நபர்கள் கலந்து கொண்டனர்.
இந்நாட்டு பிரஜைகள் என்ற அடிப்படையில் ஜனநாயக விழுமியங்களைப் பேணி நாம் எதிர்நோக்கும் சவால்கள் பற்றி கலந்துரையாடுவது எமது ஜனநாயக ரீதியான உரிமையாகும். எனினும் ஏதோ ஒரு வகையில் இதன் ஒலிப்பதிவு சிலருக்கு சென்றடைந்துள்ளது. இந்த செயலை செய்தவர் அமானிதத்திற்கு மோசடி செய்து, பண்பாட்டு ரீதியான ஒரு தவறை செய்திருக்கின்றார்.
எனவே நாம் முகம் கொடுக்கக்கூடிய சவால்களை சரியான முறையில் எதிர்கொண்டு, எல்லோரும் ஒன்றுபட்டு, நல்லெண்ணத்துடன் செயற்படுவோமாக என அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா தெரிவித்துள்ளது.
அஷ்ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர் .
அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா.
This is by non other than the Sufi set : the ultimate hypocrite