தென் ஆபிரிக்க அணி 67 ஓட்டங்களால் வெற்றி!

Date:

இலங்கை மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் தென் ஆபிரிக்க அணி டக்வத் லூயிஸ் முறையில் 67 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

இன்று பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பிக்கப்படவிருந்த போட்டி மழை காரணமாக தாமதிக்கப்பட்டது.இதனையடுத்து அணிக்கு 47 ஓவர்கள் என்றதன் அடிப்படையில், மாலை 4 மணிக்கு போட்டி ஆரம்பிக்கப்பட்டது.

இதன்படி, போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென் ஆபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.அதற்கமைய மட்டுப்படுத்தப்பட்ட 47 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்த தென் ஆபிரிக்க அணி 283 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அணிசார்பில், ஜன்னெமன் மாலன் 9 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் அடங்களாக 121 ஓட்டங்களை அதிகபடியாக பெற்றுக்கொடுத்தார்.பந்துவீச்சில் இலங்கை அணியின் துஷ்மந்த சாமீர மற்றும் சாமிக்க கருணாரத்ன ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.இந்நிலையில், இலங்கை அணி 284 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்தது.

இலங்கை அணி 25 ஓவர்களுக்கு 114 ஓட்டங்கள் பெற்றிருந்த வேளையில் மீண்டும் மழை குறுக்கிட்டது.இதன் பின்னர் டக்வத் லூயிஸ் முறையில் போட்டி 41 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டு இலங்கை அணியின் வெற்றியிலக்கு 265 ஓட்டங்களாக குறைக்கப்பட்டது.

இந் நிலையில் துடுப்பாட்டத்தை தொடர்ந்த இலங்கை அணி 36.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 197 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.இலங்கை அணி சார்பில் சரித் அசலன்க 5 பவுண்டரிகள் 3 சிக்ஸர்கள் அடங்களாக 77 ஓட்டங்களை அதிகப்படியாக பெற்றுக் கொடுத்தார்.பந்துவீச்சில் தென் ஆபிரிக்க அணியின் டப்ரைஸ் ஷம்ஸி 5 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

 

Popular

More like this
Related

சவூதியில் 9 நிமிடத்துக்கு ஒரு விவாகரத்து: அதிகமானவை ஒரு வருடத்துக்குள்!

கடந்த ஒரு வருடத்துக்குள் சவூதி அரேபியாவில் 57,595 விவாகரத்துகள் பதிவாகியுள்ளதாக சவூதி...

நாடளாவிய ரீதியில் குற்றச் செயல்கள் மற்றும் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களை தடுக்க 15 பொலிஸ் சிறப்புப் படைகள்!

நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் குற்றச் செயல்கள் மற்றும் துப்பாக்கிச்...

– வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்தியில் பிற்பகலில் மழை

இன்றையதினம் (05) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...