நானாட்டான் நறுவிலிக்குளம் பகுதியில் 68 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா கடற்படையினரால் மீட்பு

Date:

நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அச்சங்குளம்-நறுவிலிக்குளம் கடற்கரை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 68 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா பொதிகளை நேற்று செவ்வாய்க்கிழமை (21) மாலை வங்காலை கடற்படையினர் மீட்டுள்ளனர்.
-வங்காலை கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் நேற்று செவ்வாய்க்கிழமை (21) மாலை அச்சங்குளம்-நறுவிலிக்குளம் கடற்கரை பகுதியில் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்ட போது பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் ஒரு தொகுதி கஞ்சா பொதிகளை  கடற்படையினர் மீட்டுள்ளனர்.
-இதன் போது சுமார் 228 கிலோ எடை கொண்ட கேரள கஞ்சா பொதிகள் மீட் கப்பட்டுள்ளதோடு,இதன் இலங்கை பெறுமதி 68 மில்லியன் ரூபாய் என தெரிய வந்துள்ளது.
-எனினும் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.
மேலதிக நடவடிக்கைகளை கடற்படையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
(மன்னார் நிருபர்)
(22-09-2021)

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில்

இன்றையதினம் (12) நாட்டின் ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை, அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும்...

2026ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 18,000 எலிக்காய்ச்சல் சம்பவங்கள் பதிவு

நாட்டில் கடந்த ஒரு வருட காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 13,000 எலிக்காய்ச்சல்...

உணவு வகைகளின் விலைகள் அதிகரிப்பு!

நாட்டில் நிலவும் பொருளாதார சூழல் மற்றும் எரிசக்தி விலையேற்றம் காரணமாக, இன்று...

ரமழானில் இறுதி பத்து: பிக்ஹுல் இஃதிகாப்!

-முஹம்மத் பகீஹுத்தீன் இஃதிகாப் என்றால் என்ன? பொது வாழ்வின் சந்தடிகளை விட்டு தூரமாகி, அல்லாஹ்வை...