நியூசிலாந்தில் கடுமையாக்கப்படும் பயங்கரவாத தடுப்புச் சட்டங்கள்!

Date:

நியூசிலாந்தில் உள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டங்கள் கடுமையாக்கப்படும் என அந்த நாட்டு பிரதமர் ஜெசிண்டா ஆர்டென் தெரிவித்துள்ளார்.

இலங்கையர் ஒருவர் நியூசிலாந்தின் ஒக்லாண்டில் உள்ள சிறப்பங்காடி ஒன்றில் கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டதில் 6 பேர் காயமடைந்திருந்தனர்.இதனையடுத்து ஐ.எஸ் பயங்கரவாதிகளின் ஆதரவாளரான குறித்த சந்தேக நபர் பொலிஸார் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் கொல்லப்பட்டார்.தாக்குதலுக்கு இலக்கானவர்களில் மூவரின் நிலை கவலைகிடமாகவுள்ளது.

இந்த நிலையில் இன்றைய தினம் (04) ஊடகங்களுக்கு கருத்துரைத்த நியூசிலாந்து பிரதமர், வரலாற்றை மாற்ற முடியாதெனவும் எதிர்காலத்தில் அவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுவதை தவிர்க்க முடியும் எனவும் அறிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த தாக்குதலை பயங்கரவாத தாக்குதல் என தெரிவித்துள்ள நியூசிலாந்து பிரதமர் இந்த மாத இறுதிக்குள் நாடாளுமன்ற ஆதரவுடன் நாட்டில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்த எதிர்பார்த்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...