பதுளை மாவட்டம் முழுவதும் நடமாடும் சேவையின் ஊடாக தடுப்பூசிகள் பெற்றுக்கொடுக்கும் விசேட வேலைத்திட்டம்

Date:

பதுளை மாவட்டம் எங்கும் இதுவரையில் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளாத 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு இராணுவ வீரர்களின் உதவியுடன் நடமாடும் சேவையின் ஊடாக   வீடுகளுக்கே சென்று  தடுப்பூசிகளை பெற்றுக் கொடுப்பதற்கான விசேட வேலைத்திட்டம் நேற்று 31  ஆம் திகதி  முதல் நடைமுறையில் செயற்படுகின்றது.

இவ் வேலைத்திட்டம் பதுளை மாவட்டத்தின் ஊவா பரணகம பிரதேச செயலாளர் பிரிவில் 31,1ஆம் திகதியிலும் வெளிமடை பிரதேச செயலாளர் பிரிவில் 2 ஆம் திகதி  வியாழக்கிழமையும் பண்டாரவளை பிரதேச செயலாளர் பிரிவில் மூன்றாம் திகதி வெள்ளிக்கிழமை அன்றும் ,அப்புத்தளை பிரதேச செயலாளர் பிரிவில் எதிர்வரும் நான்காம் திகதி சனிக்கிழமை அன்றும் , எல்ல பிரதேச செயலாளர் பிரிவில் ஐந்தாம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளாத 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு இராணுவ வீரர்களின் உதவியுடன் நடமாடும் சேவையின் ஊடாக   வீடுகளுக்கே சென்று  தடுப்பூசிகளை பெற்றுக் கொடுப்பதற்கான விசேட வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்த படுவதுடன்

அடுத்த வாரம் 6 ஆம் திகதி திங்கட்கிழமை ஹாலிஎல பிரதேச செயலாளர் பிரிவிலும்  9 ஆம் திகதி வியாழக்கிழமை அன்று மிகாஹிவுல  பிரதேச செயலாளர் பிரிவிலும் ,எதிர்வரும் 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை அன்று ரிதிமாலியத்த  பிரதேச செயலாளர் பிரிவிலும், மஹியங்கனை பிரதேச செயலாளர் பிரிவில் எதிர்வரும் 11 ஆம் திகதியும் தடுப்பூசிகள் வழங்கப்பட உள்ளது அத்துடன் எதிர்வரும் 12ஆம் திகதி சோர்ணதொட்ட பிரதேச செயலாளர் பிரிவிலும் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளாத 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு இராணுவ வீரர்களின் உதவியுடன் நடமாடும் சேவையின் ஊடாக   வீடுகளுக்கே சென்று  தடுப்பூசிகளை பெற்றுக் கொடுப்பதற்கான விசேட வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது

இவ்வேலைத்திட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்டோர் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளாதவர்கள் அனைவரும்  கண்டிப்பாக தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என பதுளை மாவட்ட செயலாளர் தமயந்தி பரணகம வேண்டுகோள் விடுத்துள்ளார்

பதுளை பிராந்திய செய்தியாளர்

இரா.சுரேஸ்குமார்

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...