பாகிஸ்தான்- ராவல்பின்டி மைதானத்தில் இன்று (17) நடைபெறவிருந்த பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
மேலும், 3 ஒருநாள் மற்றும் 5 இருபதுக்கு இருபது போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக நியூசிலாந்து அணி 18 வருடங்களுக்கு பின்னர் பாகிஸ்தான் சென்றிருந்த நிலையிலேயே தற்போது இவ்வாறு போட்டித்தொடர் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை (PCB) செய்தி வெளியிட்டுள்ளது.