புதிய உலக சாதனை படைத்தார் போர்த்துக்கல் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ

Date:

சர்வதேச கால்பந்து போட்டிகளில், அதிக கோல்களைப் பெற்றவர் என்ற உலக சாதனையை போர்த்துக்கல் அணி வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனதாக்கியுள்ளார்.அயர்லாந்து அணியுடன் நேற்று இடம்பெற்ற உலகக் கிண்ண தகுதிகான் போட்டியில், 2 க்கு 1 என்ற கோல் அடிப்படையில் போர்த்துக்கல் அணி வெற்றிபெற்றது.

36 வயதான ரொனால்டோ, இந்தப் போட்டியில் இரண்டு கோல்களை தலையால் அடித்து, தமது 110 மற்றும் 111 ஆவது கோல்களைப் பதிவுசெய்தார்.ஈரானின் முன்னாள் வீரரான அலி டையி, 1993 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டுவரையில், 109 கோல்களைப் பெற்று, ஆடவர் சர்வதேச கால்பந்து போட்டிகளில் அதிக கோல்களைப் பெற்றவர் என்ற சாதனை நிகழ்த்தியிருந்தார்.

இந்த சாதனையை 2020 யூரோ கிண்ணப் போட்டியில், ரொனால்டோ சமன் செய்திருந்தார். இந்த நிலையில், மேலும் இரண்டு கோல்களை பதிவு செய்ததன் மூலம், அந்த சாதனையை முறியடித்து, ஆடவர் சர்வதேச கால்பந்து போட்டிகளில் அதிக கோல்களைப் பெற்றவர் என்ற புதிய உலக சாதனையை கிறிஸ்டியானோ ரொனால்டோ நிகழ்த்தியுள்ளார்.

Popular

More like this
Related

சீனாவின் பெய்ஜிங் நகரை சென்றடைந்தார் பிரதமர் ஹரிணி!

2025ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக...

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் 695.7 மில்லியன் டொலர் வரவு!

இந்த ஆண்டு செப்டம்பரில் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டிற்கு மொத்தம் 695.7...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப.1.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (13) நாட்டின் மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மாகாணங்களிலும் மன்னார்...

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...