மீண்டும் மத்திய வங்கி ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால்!

Date:

அஜித் நிவாட் கப்ரால் மத்திய வங்கியின் ஆளுநராக எதிர்வரும் 16ஆம் திகதி வியாழக்கிழமை கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாளை மறுதினம் (14) மத்திய வங்கியின் தற்போதைய ஆளுநர் டபிள்யூ.டி.லக்ஸ்மன் ஓய்வு பெறவுள்ளார்.இதேவேளை, இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் மத்திய வங்கியின் ஆளுநர் பதவியை ஏற்பதற்கு முன்னர் நேற்றைய தினம் மிஹிந்தலை ரஜமஹாவிகாரையின் விகாராதிபதி தம்மாரத்ன தேரரை சந்தித்து ஆசி பெற்றார்.

இதேவேளை, அஜித் நிவாட் கப்ராலின் வெற்றிடத்திற்கான புதிய நாடாளுமன்ற உறுப்பினரின் பதவியேற்பு எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பமாகும். நாடாளுமன்ற வாரத்தில் இடம்பெறவுள்ளது. ஜயந்த கெட்டேகொட அந்த வெற்றிடத்திற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக பொதுஜன பெரமுனவின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...