யாழ்ப்பாணம் சாவகச்சேரியை சேர்ந்த 26 வயதான ஞானப்பிரகாசம் பிரகாஷ் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்.இவர் ஊடகவியலாளர் ஆவார்.அவர் சுயாதீன ஊடகவியலாளராக கடமையாற்றி வந்தார்.
வீட்டில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவந்த நிலையில் திடீரென சுவாசச் சிரமம் ஏற்பட்ட நிலையில், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.இவரது மறைவுக்கு ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.