அண்மையில் தனியார் தொலைக்காட்சியொன்றில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் தீவிரவாத தாக்குதல் பற்றி பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசாரதேரர் தெரிவித்த விடயம் சமூகமத்தியில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனை கண்டித்து ஜம்மியத்துல் உலமா கண்டன அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.இந் நிலையில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா விசேட ஊடக மாநாடொன்றை நாளை (17) மாலை 4 க்கு ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.