வாழ்க்கை செலவு தொடர்பான குழு இன்று (24) கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அலரி மாளிகையில் இந்த குழு கூடவுள்ளது.
இதன்போது அரிசி, பால்மா, கோதுமைமா, சிமேந்து மற்றும் எரிவாயு விலை தொடர்பில் கலந்துரையாட எதிர்ப்பார்ப்பதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.