நாட்டில் அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு இல்லை என அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தினால் அவசரமாக மருந்து கொள்வனவு செய்யப்பட்டதால் அரசுக்கு பாரிய நட்டம் ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.நாட்டில் அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சிலர் தெரிவிக்கும் கருத்துகள் உண்மைக்கு புறம்பானவை என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.