அரசிக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்க இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, முன்னதாக வௌியிடப்பட்டுள்ள அரிசிக்கான அதிகப்பட்ச மொத்த விலை மற்றும் அதிகப்பட்ச சில்லரை விலையுடன் தொடர்புடைய வர்த்தமானி அறிவித்தல் ரத்துச் செய்யப்பட்டுள்ளது.
அதேவேளை கையிருப்பை பேணும் நோக்கில் 100,000 மெட்ரிக் டன் அரிசியை இறக்குமதி செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.