இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 44 ஆவது போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 06 விக்கெட்டுக்களால் வெற்றி!

Date:

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 44 ஆவது போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 06 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

சன்ரைசஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சென்னை சுப்பர் கிங்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசஸ் ஹைதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 07 விக்கெட்டுக்களை இழந்து 134 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அணிசார்பில் அதிகபடியாக ரிதிமன் சஹா 44 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.துடுப்பாட்டத்தில் சோபிக்க தவறிய சன்ரைசஸ் ஹைதராபாத் அணியின் ஏனைய வீரர்கள் 20க்கும் குறைவான ஓட்டங்களையே பெற்றனர்.பந்துவீச்சில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் ஜோஷ் ஹேசல்வுட் 24 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இந்நிலையில், 135 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 19.4 ஓவர்கள் நிறைவில் 04 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.அணிசார்பில் அதிகபடியாக ருதுராஜ் கெய்க்வாட் 45 ஓட்டங்களையும், பஃப் டூ ப்ளெசிஸ் 41 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் சன்ரைசஸ் ஹைதராபாத் அணியின் ஜேஸன் ஹோல்டர் 27 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.இந்நிலையில், சென்னை சுப்பர் கிங்ஸ் அணி முதல் அணியாக ப்ளே ஓஃப் சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...