ஜனாதிபதியின் சமய மற்றும் கலாசார விவகாரங்களுக்கான சர்வதேச ஆலோசகர் கௌரவ கலாநிதி போதாகொட சன்திம நாயக தேரர் அவர்களை நேற்று (13) தேசிய ஜக்கியத்துக்கான சர்வ மத கூட்டமைப்பின் முஸ்லிம் விவகாரத்துக்கான சமய தலைவர் அல்-ஹாஜ் அஸ்-ஸெய்யத் கௌரவ கலாநிதி ஹஸன் மௌலானா அல்-காதிரி சந்தித்துள்ளார்.
இச் சந்திப்பு களனி, மானல்வத்தையில் அமைந்துள்ள பெளத்த ஆய்வுகளுக்கான நாகானந்தா சர்வதேச நிறுவனத்தில் இடம்பெற்றது.இச்சந்திப்பின் போது தேசிய இன மத நல்லிணக்கத்துக்கான எதிர்கால வேலைத்திட்டங்களை பற்றி விஷேட கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.