இலங்கை அணிக்கு சொந்த மண்ணில் வெள்ளையடிப்பு! இருபதுக்கு 20 கிண்ணம் தென்னாப்பிரிக்கா வசம்!

Date:

இலங்கை மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் தென் ஆபிரிக்க அணி 10 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 08 விக்கெட்டுக்களை இழந்து 120 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இலங்கை வீரர்கள் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்க தவறியிருந்த நிலையில் குசல் ஜனித் பெரேரா 3 பவுண்டரிகள் அடங்களாக அதிகபடியாக 39 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.பந்துவீச்சில் தென் ஆபிரிக்க அணியின் காகிசோ ரபாடா 23 ஓட்டங்களை கொடுத்து 02 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இதற்கமைய, 121 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்க அணி 14.4 ஓவர்கள் நிறைவில் விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை அடைந்தது.அணி சார்பில் குயின்டன் டி கொக் 7 பவுண்டரிகள் அடங்களாக 59 ஓட்டங்களையும், ரீசா ஹென்ரிக்ஸ் 4 பவுண்டரிகள் 1 சிக்ஸர் அடங்களாக 56 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.இதற்கமைய தென் ஆபிரிக்க அணி 3 -0 என்ற அடிப்படையில் இருபதுக்கு 20 தொடரை கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இந்த ஆண்டில் இதுவரை 1.3 மில்லியன் சுற்றுலா பயணிகள் வருகை!

இந்த ஆண்டில் இதுவரை இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை...

இந்திய ரிசர்வ் வங்கியின் அதிகாரி சதக்கத்துல்லா மறைவு!

இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) மேனாள் அதிகாரியும், பொருளாதார வல்லுநருமான முனைவர்...

இலங்கையில் 83,000 ஐக் கடந்தது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை!

நாட்டில் இந்த ஆண்டில் இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை மேலும்...

ஆன்மீக ஒளி பரப்பும் எசல பௌர்ணமி தினம் இன்று!

இலங்கை உள்ளிட்ட உலகெங்கும் உள்ள பௌத்த மக்களால் மிகுந்த பக்தியுடன் அனுஷ்டிக்கப்படும்...