இலங்கை மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கிடையிலான இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பிக்கும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.ஏற்கனவே, இரவு 8 மணிக்கு இந்த போட்டிகள் ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.எனினும், இந்த போட்டிகள் மாலை 7 மணிக்கு ஆரம்பிக்கப்படும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிக்கை ஒன்றின் ஊடாக தெரிவித்துள்ளது.
இதற்கமைய மாலை 6.30 மணிக்கு போட்டிக்கான நாணய சுழற்சி இடப்படுவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.முன்னதாக இடம்பெற்ற ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரை இலங்கை அணி 2-1 என்ற அடிப்படையில் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.