சமூக ஊடகங்களில் போலி செய்திகள் பெருமளவில் பரப்பப்படுவது வழமை.எனினும் இலங்கையின் பிரதான ஊடகங்கள் ,ஊடக தர்மத்தை கடைபிடிக்காது இயங்குவதை நாம் கடந்த கால தரவுகளின் மூலம் அவதானித்து வருகின்றோம். இது நம் நாட்டின் ஊடக மகத்துவத்தை பாதிக்குமென தெரிந்திருந்தும் அவர்கள் இவ்வாறு செயற்படுவது புரியாத புதிராகவே உள்ளது.சர்வதேச அரங்கில் பல்வேறு கோணங்களில் தாக்கப்பட்டு வருகின்ற முஸ்லிம்கள் சம காலமாக இலங்கையிலும் அதே நிலமையை தான் எதிர்நோக்கி வருகின்றனர் . இதனை கடந்த கால நிகழ்வுகள் உறுதிப்படுத்துகிறது.
கடந்த சனிக்கிழமை (11) சிங்கள பத்திரிகையான “தேசய” வில் இஸ்லாத்தை கைவிட்டு சுதந்திரம் தேடும் முஸ்லிம்கள் என்ற தலைப்பில் பிரியன்ஜன் சுரேஷ் டி சில்வாவினால் எழுதப்பட்ட கட்டுரைக்கான பதில் கட்டுரையாக இது அமைகின்றது.ஊடகமென்பது ஒரு நாட்டினுடைய ஒற்றுமை மற்றும் ஐக்கியத்தை கட்டியெழுப்ப கூடிய பாலமாக அமைய வேண்டும்.வாசகர்கள் அந்த கட்டுரையை படிக்க வேண்டும்.அவர் அதற்காக செலவழித்த நேரம் அவரது அறிவில் இனவாதம் கலந்துள்ளதை உங்களுக்கும் தெளிவாகக் காட்டும் என்பதால்.இன்று ஊடகங்களில் வெளியிடப்படும் பெரும்பாலான கட்டுரைகள் பணம் சம்பாதிக்கும் நோக்கத்திற்காகவும் , இனங்களுக்கிடையில் முரண்பாட்டை தூண்டுவதற்கு எழுதப்படுகின்றதாகவே பார்க்கின்றோம்.எனினும் அக் கட்டுரைகளை வாசிக்கும் போது அதில் நம்பகத்தன்மையான விடயங்கள் ஏதும் உள்ளடங்கப்பட்டிருக்காது,நீதியை நிலைநாட்டும் எந்தவொரு வார்த்தைகளையும் காணமுடியாது.ஒரு பத்திரிகையாளர் கடைப்பிடிக்க வேண்டியது வெறுப்பு மாத்திரம் தான் என்பதை வாசகர்கள் அந்த கட்டுரையினை வாசித்த இறுதியில் உணருவார்கள்.ஒரு ஊடகத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் எவ்வாறு கடைபிடிக்கப்பட்டுள்ளது என்பதையும் பிரியஞ்சன் சுரேஷ் டி சில்வா எழுதிய கட்டுரையில் உணர முடிந்தது.அக் கட்டுரையில் எடுத்துக்காட்டப்பட்டுள்ள விடயங்களில் எவ்வித உண்மையும் இல்லை, நம்பகத்தன்மையற்ற தரவுகளை எடுகோளாக எடுத்திருக்கிறார்.இது ஒரு சமுதாயத்தை பாரிய சீர்கேட்டில் இட்டுச் செல்ல வழிவகுக்கும் .எனவே இது போன்ற கட்டுரைகளின் இலங்கை சவாலாக எடுத்து அதன் உண்மையை சமூகத்திற்கு உணர்த்த வேண்டிய பொறுப்புள்ளது.
மதத்தை பற்றி ” மதம் என்பது ஒரு கடவுள் அல்லது தெய்வங்களைப் பற்றிய ஒரு குறிப்பிட்ட நம்பிக்கையாக சுருக்கமாக வரையறுக்கலாம் என ஆரம்பம் செய்த பிரியன்ஜன் ஒரு நபர் தனக்கு விருப்பமான மதத்தை பின்பற்ற உரிமை உண்டு என அவர்களின் அனுபவத்துடன் விவரித்துள்ளார்.இஸ்லாத்தை விட்டு வெளியேறுபவர்கள் தூக்கிலிடப்படுவார்கள் ,கொலை செய்யப்படுவார்கள் என்ற எண்ணத்தை கட்டுரையில் குறிப்பிட்டவர் அவர் அறியாமலேயே கட்டுரையின் தலைப்பை இஸ்லாத்தை விட்டும் சுதந்திரம் பெற்றவர்களின் மகிழ்ச்சியான அனுபவக் கதைகளை சொல்கிறார்.அவர் சமூகத்தில் உருவாக்க முயன்ற மதவாதத்தை நியாயப்படுத்த இஸ்லாத்திலிருந்து வெளியேறி தூக்கிலிடப்பட்டவர்களின் சோகக் கதைகளை அந்தக் கட்டுரையில் உள்ளடக்கியிருக்க வேண்டும்.இந்தக் கட்டுரையின் அடித்தளம் எப்படி சரிந்துள்ளது என்பதை வாசகர்கள் புரிந்து கொள்வார்கள்.சமூகத்தில் பொய்களை பரப்புவதற்கு ஒருவரின் எஜன்டாவின் கீழ் வேலை பார்ப்பவர்கள் மேற்கொள்கின்ற அதே பாணியை தான் பிரியஞ்சன் தனது கட்டுரையில் அற்புதமாக எழுதியுள்ளார்.அதில் அவர் எடுத்துக்காட்டிய தரவுகளுக்கு ஆதாரங்களின் இறுதியில் பயன்படுத்தப்பட்டது .அதாவது வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் ,சமூகவியலாளர்கள்,வலைத்தளங்கள்சுட்டிக்காட்டியது,அறிவிக்கிறது என்றவாறு அமைந்துள்ளது.ஒரு தகவலிற்கு நம்பகமான தரப்பின் வெளியீடுகள் தேவை.எனினும் இதில் அவ்வாறு எந்த துல்லியமான மற்றும் உண்மைத் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கவில்லை.அதன்படி பிரியஞ்சனின் கட்டுரையின் உள்ளடக்கத்தின் நம்பகத்தன்மையில் கடுமையான சிக்கல் இருப்பதை அவதானிக்க முடிகின்றது.
இஸ்லாம் பெண்களை அடிப்பதற்கு அனுமதியளிக்கின்றதோடு பெண் அடிமைத்தனத்தை ஊக்குவித்து பிற நாடுகளுக்கு எதிராக ஜிகாத் செய்வதை தூண்டுவதாகவும் , பெரியவர்களுக்கு தாய்ப்பால் கொடுப்பதாகவும் , கொடுங்கோல் இஸ்லாமிய ஆட்சியாளர்கள் என இதனால் பலர் இஸ்லாத்தை விட்டு வெளியேறுவதாக எழுதியுள்ளார்.அவர் எடுத்துக்காட்டிய தரவும் பிழை , ஆரம்ப பந்தியில் கூறியது போல இஸ்லாத்தை விட்டு போகின்றவர்கள் கொலை செய்யப்படுவார்கள் என்று ஆனால் அவர் இங்கு எதற்குமே தெளிவான ஆதாரங்களை நிரூபிக்கவில்லை என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.இது உண்மையிலே முஸ்லிம்களின் மத்தியில் நடைபெற்ற விடயங்கள் அல்ல அவருடைய இனவாத எண்ணத்தை எழுத்தின் மூலம் வெளிக்கொண்டு வருவதற்காக தனது பேனையை உபயோகித்துள்ளார் என்பது தெளிவானது.எனினும் ஒரு ஊடகவியலாளருக்கு இருக்க வேண்டிய நடுநிலைமை , பக்கச்சார்பற்ற தன்மை என்பன அவர் எழுதிய கட்டுரையில் சிதைந்துள்ளது.சர்வதேச ஊடகங்களில் வெளியாகும் செய்திகளின் பின்னணியில் இந்தக் கட்டுரை வெளியிடப்பட வேண்டுமானால் உரிய தரவுகளின் உண்மையை அறிந்து கொள்ள இஸ்லாமிய ஆதாரங்களை படிக்க வேண்டும், இஸ்லாமிய மார்க்க அறிஞர் ,புத்தி ஜீவிகளிடம் வினவி இதனை அறிந்து கொண்டு உறுதிப்படுத்தப்பட்ட பின் வெளியிட வேண்டும் அது தான் ஒரு பொறுப்பான பத்திரிகையாளனின் கடமையாகும்.அக் கட்டுரையை வாசிக்கும் போது அதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் வரம்பை மீறியதாகவே உள்ளதை அறிந்து கொள்ள முடிகின்றது.ஏனைய மதங்கள் அல்லது தத்துவங்களைப் போல இஸ்லாத்தில் சலுகைகளைப் பெற்ற மதகுருமார்கள் என்று எதுவும் தெரியாது அவர் அத்தகைய கட்டுரையை எழுதியிருப்பது இஸ்லாத்தை பற்றிய எழுத்தில் ஆவேசம் புரிகின்றது.அல்குர்ஆன்,ஹதீஸை படித்துவிட்டு தயவு செய்து ஆதாரங்களுடன் இந்த கட்டுரையை எழுதுமாறு பிரியஞ்சனவை கேட்டுக் கொள்கிறேன்.
ஆப்கானில் தலிபான்களை எடுத்துக் காட்டி ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ் ,சோமாலியாவில் உள்ள ஷெபாப் அமைப்பு மற்றும் பிற தீவிரவாத இஸ்லாமிய அமைப்புக்களால் தான் உலக அழிவு ,வறுமை என்பன உருவாகியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.அமெரிக்காவின் நாசகார நடவடிக்கையினால் உலகில் ஏராளமான நாடுகள் வீழ்ச்சியடைந்துள்ளது.அமெரிக்காவிற்கு சவாலாக இருந்த அல்கெய்தா இயக்கத்தின் தலைவரை உலக அரங்கில் தீவிரவாதியாக பிரதிபளிக்க அமெரிக்கா நடத்திய நாடகமே 9/11 தாக்குதல் .இதனை பின்லேடன் தான் நிகழ்த்தினார் என்பதற்கு வலுவான ஆதாரங்கள் எதுவும் நிரூபிக்காது வெறுமனே பேச்சளவில் கூறி வருகின்றனர்.ஒசாமா பின்லேடனை தேடுவதாகவும், அணு ஆயுத குற்றங்களை சுமத்தியும் ஈராக், லிபியா, பலஸ்தீனம், சிரியா, சோமாலியா போன்ற நாடுகளின் இயற்கை வளங்களை கொள்ளையடித்து வரும் அமெரிக்காவின் செயல்களை பிரியஞ்சன்கள் போன்ற அமெரிக்கா கைக்கூலிகளுக்கு எவ்வாறு புலப்படும்.
இஸ்லாத்தை விட்டு வெளியேறியவர்கள் சுதந்திரமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்வதை சுட்டிக்காட்டிய பிரியன்ஞன் , இஸ்லாத்தை விட்டு வெளியேறியவர்கள் கொலை செய்ய வேண்டும் என்பதை இஸ்லாம் கூறியதாக சுட்டுக்காட்டியுள்ளார்.இங்கு பிரியன்ஞனின் எடுத்துக்காட்டுகளின் படி இஸ்லாத்தை விட்டு வெளியேறியவர்கள் கொல்லப்பட்டார்களா? அல்லது மகிழ்ச்சியாக வாழ்கிறார்களா? என்ற கேள்வி எழுகின்றது.ஒருவேளை பிரியஞ்சனுக்கு இஸ்லாத்தை விட்டு வெளியேறியவர்களை இலகுவாக கொன்று விடலாம் என்ற எண்ணம் மனதில் தோன்றியிருக்கலாம்.ஏனொனில் அவர் தான் மனதில் உதித்ததை எல்லாம் ஆதாரமின்றி எழுதும் திறமை படைத்தவர்.இக் கட்டுரையின் தொடக்கத்தையும் நடுப்பகுதியையும் பொருத்து அவர் இந்த கட்டுரையை அமெரிக்கா வாசகர்களுக்காக எழுத முயற்சிக்கிறார் என்பது தெளிவாகின்றது.ஆனால் அவருடைய எழுத்தின் பலவீனம் கட்டுரை வந்த அமைப்பே காட்டிக் கொடுத்துள்ளது.சில புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதாக “இஸ்லாமிய வரியான ஜிஸ்யாவை ” பற்றி எழுதியுள்ளார் . மேலும் அந்த புத்தகங்கள் என்னவென்று கூட அவருக்கு தெரியாது ,அந்த புத்தகங்களின் பெயர்களை கூட எழுதவில்லை.மேலும் இது ஒரு இனத்தின் மீதான வெறுப்பை சமூகத்தில் பரப்புவதற்கான முயற்சியாகவே உள்ளது.
ஒரு வலைத்தளத்திலோ அல்லது மற்றொரு ஊடகத்திலோ குறிப்பிடப்பட்டிருப்பதால் எல்லாம் உண்மை என்று நாம் முடிவு செய்ய முடியுமா ? சமீபத்தில் பல துறவிகள் குடிப்பழக்கம் மற்றும் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியானது .இது போன்ற சம்பவங்களின் அடிப்படையில் அனைத்து துறவிகளும் இதற்கு உள்ளாகின்றனர்.இதனால் புத்தமதத்தை அளவிடுவதற்கான அளவுகோலாக எந்த அறிவார்ந்த நபரும் செய்யாத செயலாக உள்ளது.
உலக புகழ்பெற்ற PEW ஆராய்ச்சி நடத்திய ஆய்வின்படி இஸ்லாம் 2015-2060 காலகட்டத்தில் வேகமாக வளர்ந்து வரும் மதமாக அடையாளம் காணப்பட்டுள்ளது.வளர்ச்சி விகிதம் பின்வருமாறு,
இஸ்லாம்- +70%
கிறிஸ்தவம்-34%
இந்து மதம்-27%
யூத மதம்-15%
புத்தமதம்-07%
இந்த விவரங்களை பின்வரும் இணையத்தளம் வெளியிட்டுள்ளது.https://www.pewresearch.org/fact-tank/2017/04/06/ஏன்-முஸ்லிம்கள்-உலகங்கள்-வேகமாக .அடுத்த அரை நூற்றாண்டில் உலகின் மிகப்பெரிய மதமாக கிறிஸ்தவத்தின் நீண்ட ஆட்சி முடிவுக்கு வரலாம் என்று பியூ ஆராய்ச்சி மையத்தின் மதக் குழுக்களுக்கான மக்கள் தொகை வளர்ச்சி கணிப்புகளை உருவாக்கும் ஒரு ஆய்வு கூறுகிறது.உண்மையில் , முஸ்லிம்கள் 2015 மற்றும் 2060 க்கு இடையில் ஒட்டுமொத்த உலக மக்கள் தொகையை விட இரண்டு மடங்காக வேகமாக வளருவதாகவும் எதிர்காலத்தில் தசாப்தங்களில் உலக மக்கள் தொகை 32% அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 70% அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.2015 இல் 1.8 பில்லியனில் இருந்து 2060 இல் கிட்டத்தட்ட 3 பில்லியனாக உருவாகும் 2015 இல் உலகளவில் முஸ்லிம்கள் 24.1% மக்கள் தொகை நாற்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் உலக மக்களில் பத்தில் மூன்று பேருக்கு மேல் (31.1%) இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
பிரியஞ்சன் எழுதிய கட்டுரை அர்த்தமற்றது என்பதை விளக்கும் அல்குர்ஆனில் இருந்து சில வசனங்கள் பின்வருமாறு,
“இஸ்லாத்தில் எந்த நிர்ப்பந்தமும் இல்லை.தவறான பாதையிலிருந்து சரியான பாதை தெளிவாக உள்ளது”.(அல்குர்ஆன் 62:256)
“உங்கள் செயல்களின் பலனை நீங்கள் பெறுவீர்கள்,எனது செயல்களின் பலனை நான் பேசுவேன் “(அல்குர்ஆன் 109-06)
ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் பல்வேறு கோணங்களில் நசுக்கப்பட்டுள்ள நிலையில் இனங்களுக்கிடையில் மீண்டும் முரண்பாட்டை சர்வதேச எஜன்டாக்களுக்கு வேலை செய்பவர்கள் முயற்சிக்கின்றதை பிரியன்ஞன் போன்றவர்களின் எழுத்துக்களின் மூலம் புலப்படுகின்றது.இவ்வாறானவர்களை ஊக்குவிக்கின்ற ஊடகங்களும் சமூகத்திற்கு விஷங்களாகவே தொழிற்படுகின்றது.ஏனைய ஊடகங்களில் பரப்பப்படுகின்ற போலி மற்றும் தவறான செய்திகளுக்கு இன்னுமொரு ஊடகத்தினாலே நிச்சயம் பதில் கொடுக்க முடியும் என்பது மறுப்பதற்கில்லை.நாட்டில் பிறந்தவர்களுக்கு நாட்டின் மீது பற்று தேவை என வெறும் வாய் வார்த்தைகளால் மாத்திரம் கூறி போதாது . இனங்களுக்கிடையிலான சகவாழ்வை பல்லின சமூகத்தில் கட்டியெழுப்ப நாம் ஒவ்வொருவரும் முயற்சிக்க வேண்டும்.எழுத்தாளர் எப்படி எழுதினாலும் வாசகர் கவனத்துடன் படிக்க வேண்டிய நிர்ப்பந்த நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம் என்று சொல்வதில் ஜயமில்லை.
அப்ரா அன்ஸார்.
https://www.deshaya.lk/article/43/features/19004/ඉස්ලාමය-අතහැර-නිදහස-සොයා-යන-මුස්ලිම්වරු