தேசிய ஒளடத அதிகார சபையின் தரவுகள் அழிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்படி, அதிகார சபையின் தரவு தளத்தை பராமரித்து வந்த எபிக் லங்கா டெக்னோலஜிஸ் நிறுவனத்தின் தரவு இயக்குநர் ஒருவரே இவ்வாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, இச் சம்பவம் தொடர்பில் முன்னதாக குறித்த நிறுவனத்தில் பிரதம நிறைவேற்று அதிகாரி தரிந்ர கல்பகே கைதுசெய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.இந்நிலையில், இச் சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.