எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 1 ஆம் திகதி நாட்டை திறக்க எதிர்பார்க்கின்ற போதிலும் சில கட்டுப்பாடுகளை விதிக்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
நாவலபிட்டிய பகுதியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.நாவலபிட்டிய வைத்தியசாலையில் அபிவிருத்தி நடவடிக்கைகளை பார்வையிடுவதற்காக அவர் இந்த விஜயத்தினை மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.