நாடு முடக்கப்பட்டுள்ள தற்போதைய நிலையில், கொழும்பு மாவட்டத்திலுள்ள பொருளாதார மத்திய நிலையங்களை மையப்படுத்தி, நேற்று முதல் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வீடுகளுக்கு விநியோகிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
இதனூடாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சலுகை விலையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென கொழும்பு மாவட்ட செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்தார்.
இதற்கமைய, கொழும்பு மாவட்டத்திலுள்ள அனைத்து பொருளாதார மையங்களும் நேற்று திறக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.