நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளாகி மேலும் 79 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்று முன்னர் உறுதிப்படுத்தியுள்ளார்.
குறித்த அனைவரும் நேற்றைய தினம் (24) உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12,609 ஆக அதிகரித்துள்ளது.இதேவேளை, இந் நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 511,372 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.மேலும், கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 453,689 ஆக அதிகரித்துள்ளது.