இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களிற்கு பணம் செலுத்தும் நிலையில் இலங்கை இல்லாததால் 800கும்மேற்பட்ட கொள்கலன்கள் துறைமுகத்திலிருந்து சிக்குண்டுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அந்த கொள்கலன்களை கைப்பற்றி அதில் உள்ள பொருட்களை சதொச மூலம் விற்பது அரசாங்கத்தின் பெரும் தவறான நடவடிக்கை இதனை அரசாங்கம் மீளாய்வு செய்யவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சதொசவில் இடம்பெற்ற ஊழல்மோசடியை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர்களை குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணை செய்ய முயல்வதன் நோக்கம் என்ன என இலங்கை நுகர்வோர் அதிகாரசபையின் முன்னாள் நிறைவேற்று பணிப்பாளர் துசான் குணவர்த்தன கேள்வி எழுப்பியுள்ளார்.
நுகர்வோர் அதிகார சபையின் நிறைவேற்று பணிப்பாளர் என்ற அடிப்படையில் நான் இந்த மோசடியை வெளிப்படுத்தியிருந்தேன் – நான் ஒரு மோசடியை மாத்திரம் வெளிப்படுத்தியிருந்தேன் அம்பலப்படுத்தப்படாத இன்னும் பல மோசடிகள் ஊழல்கள் உள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.
அச்சுறுத்தல்கள் மிரட்டல்களை தொடர்ந்து நான் எனது இராஜினாமா கடிதத்தை நுகர்வோர் அதிகார சபையின் தலைவரான மேஜர் ஜெனரல் சாந்த திசநாயக்கவிற்கு 21ம் திகதி அனுப்பினேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தான் அதனை ஏற்றுக்கொண்டதாக அவர் இன்னமும் பதில் அளிக்கவில்லை எனவும் துசான் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
தலைவரின் முடிவு எவ்வாறானதாகயிருந்தாலும் நான் தற்போது அந்த பதவியில் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வெள்ளை பூண்டு ஊழல்குறித்து நான் தெரிவித்த ஒவ்வொரு விடயம் குறித்தும் நான் உறுதியாகயிருக்கின்றேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பூண்டு ஊழலைமூடி மறைக்க ஒரு இழிவான முயற்சி இடம்பெறுவதாக நான் உணர்ந்தேன் பொதுமக்கள் செல்ல தீர்மானித்தேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வெலிசரையில் நுகர்வோர் அதிகாரசபை மேற்கொண்ட சோதனை நடவடிக்கை காரணமாகவே மோசடிக்காரர்களின் திட்டம் வெற்றிபெறவில்லை என தெரிவித்துள்ள துசான் குணவர்த்தன இரண்டு கொள்கலன்கள் நிரம்பிய 56000 கிலோ வெள்ளை பூண்டினை துறைமுகத்திலிருந்து 120 ரூபாய்க்கு கொள்வனவு செய்து வழமையான விற்பனையாளரிற்கு 135 ரூபாய்க்கு விற்றபின்னர் பின்னர் அவரிடமிருந்து 445 ரூபாய்க்கு கொள்வனவு செய்வதே சதொசவின் திட்டம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சதொசவர்த்தக அமைச்சின் கீழ் வருவதால் வர்த்தக அமைச்சு இது குறித்து பதிலளிக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஊடகங்கள் உண்மையை வெளிப்படுத்தியதை தொடர்ந்து சதொச வேறு வழியின்றி விநியோகஸ்தர்களுடனான உடன்படிக்கையை இரத்துசெய்துவிட்டு வெள்ளை பூண்டினை தனது விற்பனை நிலையங்கள் ஊடாக விற்பனை செய்யவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அச்சு தொலைக்காட்சி ஊடகங்களிற்கு அப்பால் சமூக ஊடகங்களில் இந்த விவகாரம் மிகுந்த முக்கியத்துவத்தை பெற்றுள்ளது,என தெரிவித்துள்ளஇலங்கை நுகர்வோர் அதிகாரசபையின் முன்னாள் நிறைவேற்று பணிப்பாளர் துசான் குணவர்த்தன சதொசவில் இடம்பெற்றது நாட்டின் பொருளாதார நெருக்கடியை வெளிப்படுத்துகின்றது,
இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களிற்கு பணம் செலுத்தும் நிலையில் இலங்கை இல்லாததால் 800கும்மேற்பட்ட கொள்கலன்கள் துறைமுகத்திலிருந்து சிக்குண்டுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அந்த கொள்கலன்களை கைப்பற்றி அதில் உள்ள பொருட்களை சதொச மூலம் விற்பது அரசாங்கத்தின் பெரும் தவறான நடவடிக்கை இதனை அரசாங்கம் மீளாய்வு செய்யவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.