சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கப்படுமா? – தீர்மானம் இன்று!

Date:

பால்மா, கோதுமை மா, சமையல் எரிவாயு மற்றும் சீமெந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையை அதிகரிப்பதா? இல்லையா? என்பது தொடர்பாக இன்று தீர்மானிக்கப்படவுள்ளது.

இது தொடர்பிலான யோசனை நுகர்வோர் அதிகார சபையினால் அண்மையில் கூடிய வாழ்க்கை செலவுக் குழுவிடம் முன்வைக்கப்பட்ட நிலையில், இன்று (திங்கட்கிழமை) இடம்பெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் இது குறித்து தீர்மானிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதற்கமைய இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால்மாவின் விலையை 200 ரூபாவாலும் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை 10 ரூபாவாலும் சீமெந்து ஒரு மூடையின் விலையை 50 ரூபாவாலும் அதிகரிக்க வாழ்க்கை செலவுக் குழு யோசனை முன்வைத்துள்ளது.

அத்துடன், சமையல் எரிவாயுவின் விலையை 550 ரூபாவால் அதிகரிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...