சவுதி அரேபியாவின் அபா விமான நிலையத்தில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் 8 பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலில் விமான நிலையம் மற்றும் தனியார் நிறுவனத்தின் விமானம் ஒன்று சேதமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான நிலையத்தை தாக்க முயன்ற மற்றொரு ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன. ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தாக்குதலை நடத்தியதாக கூறப்படும் நிலையில், ஹவுத்தி கிளர்ச்சியாளர் தரப்பில் எந்த அறிவிப்பும் வெளயிடப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.