‘சுவ தரணி’ மருந்துப் பொதி பிரதமரிடம் வழங்கி வைப்பு!

Date:

பொதுமக்களை கொவிட் தொற்றிலிருந்து பாதுகாக்கும் நோக்கில் இலவசமாக பகிர்ந்தளிக்கப்படவுள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான ´சுவ தரணி´ சுதேச (ஆயுர்வேத) மருந்துப் பொதி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் இன்று (28) முற்பகல் அலரி மாளிகையில் வைத்து கையளிக்கப்பட்டது.

சுதேச வைத்திய முறைகளின் மேம்பாடு, கிராமிய மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலைகள் அபிவிருத்தி மற்றும் சமூக சுகாதார இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடியினால் உத்தியோகபூர்வமாக இந்த ´சுவ தரணி´ மருந்துப் பொதி பிரதமரிடம் வழங்கப்பட்டது.

சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்திற்கமைய பயணித்து ஆரோக்கியமான மக்களை உருவாக்கும் உன்னத நோக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான ´சுவ தரணி´ சுதேச மருந்துப் பொதியானது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான ´சுவ தரணி´ பானம், மருத்துவ கஞ்சி ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.

இந்த சுதேச மருந்துப் பொதிகளை முதல் கட்டமாக நாடு முழுவதும் அமைந்துள்ள சகல வழிபாட்டு தலங்களுக்கும், இரண்டாம் கட்டமாக பிரதேச செயலாளர் அலுவலகங்கள் ஊடாக பொதுமக்களுக்கும் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வில் பிரதமரின் செயலாளர் காமினி செனரத், பிரதமர் அலுவலக பணிக் குழாம் பிரதானி யோஷித ராஜபக்ஷ மற்றும் சுதேச வைத்திய முறைகளின் மேம்பாடு, கிராமிய மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலைகள் அபிவிருத்தி மற்றும் சமூக சுகாதார இராஜாங்க அமைச்சு, ஆயுர்வேத திணைக்களம் மற்றும் ஆயுர்வேத மருந்துப்பொருள் கூட்டுத்தாபனம் ஆகியவற்றின் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...