ஜயந்த கெட்டகொட பாராளுமன்ற உறுப்பினராக சற்று முன்னர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் மீண்டும் சத்திய பிரமாணம் செய்தார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக செயற்பட்ட அஜித் நிவார்ட் கப்ரால் அண்மையில் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்திருந்தார்.
இவ்வாறு வெற்றிடமான பாராளுமன்ற ஆசனத்திற்கே, ஜயந்த கெட்டகொட இன்று நியமிக்கப்பட்டார்.