கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 376 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறை பேச்சாளர், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ இதனைத் தெரிவித்துள்ளார்.இந்தக் காலப்பகுதியில் 18 வாகனங்கள் பொலிஸாரினால் கையகப்படுத்தப்பட்டுள்ளன.இதற்கமைய, இதுவரையில் ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 78,253 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.