இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தின்போது தமிழகத்தின் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களை 01.09.2021 நேற்றையதினம் சந்தித்து கலந்துரையாடினார் பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் .
இச் சந்திப்பின் போது தமிழ்நாட்டிற்கும், இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்கள் செரிந்துவாழும் மலையகத்திற்கும் இடையிலான இருதரப்பு பரஸ்பர உறவுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளதுடன், மலையகத்திற்கான அபிவிருத்திகள் தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
மேலும் நீண்ட நாள் அரசியல் போராட்டங்களுக்கு மத்தியில் இலங்கையில் மலையகத்திற்கான தனியான பல்கலைகழகம் அமைப்பதற்கான அனுமதியை இலங்கை அரசாங்கம் வழங்கியுள்ளமையை தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் M. K. Stalin அவர்களின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.
அத்துடன் இலங்கையின் மலையகத்தில் அமையவுள்ள பல்கலைகழகத்திற்கும்,
தமிழ்நாட்டின் அரசாங்கத்திற்கும் உறவை வளர்த்துக்கொள்வது தொடர்பாகவும் விரிவாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் கலந்துரையாடினார்.