மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட, கொவிட் நோயாளர்களை நோயின் தன்மைக்கு ஏற்ப வகைப்படுத்தி தேவைப்பாட்டின் அடிப்படையில் வைத்தியசாலையில் அனுப்பதற்கான 1904 குறுந்தகவல் சேவை வேலைத்திட்டமானது இன்று (02) முதல் தென் மாகாணத்திலும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது.
கொரோனா நோயாளர்களின் நோய் தன்மைக்கு ஏற்ப அவர்களை வகைப்படுத்தி சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்புதல் மற்றும் வீடுகளில் வைத்து முகாமை செய்தல் ஆகியவற்றுக்காக கொவிட் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தினால் மேல் மாகாணத்தில் கடந்த ஆகஸ்ட் 19 ஆம் திகதி முதல் இந்த குறுந்தகவல் சேவை அமுல்படுத்தப்பட்டுள்ளது.
அதற்கமைய நோயாளிகள் கீழ்வரும் தகவல்களை உள்ளீடு செய்து 1904 என்ற இலக்கத்துக்கு குறுந்தகவல் அனுப்பி வைக்க முடியும்.