கெலனிய,மானல்வத்தையில் அமைந்துள்ள பௌத்த ஆய்வுகளுக்கான நாகானந்தா சர்வதேச நிறுவனத்தின் ஸ்தாபகரும் ஜனாதிபதியின் சமய மற்றும் கலாசார விவகாரங்களுக்கான சர்வதேச ஆலோசகர் வண. கௌரவ கலாநிதி போதாகம சன்திம நாயக தேரர் அவர்களுக்கும் புத்தசாசன,மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான அமைச்சர் கௌரவ பிரதமரின் மத விவகார இணைப்பாளர்களான வண.கௌரவ கலாநிதி அங்ரஹரே கஸ்ஸப நாயக தேரர் (பௌத்த விவகாரம்), சிவ ஸ்ரீ கௌரவ கலாநிதி பாபு சர்மா குருக்கள் (ஹிந்து விவகாரம்), அல்-ஹாஜ் அஸ்-ஸெய்யத் கௌரவ கலாநிதி ஹஸன் மௌலானா அல்-காதிரி (முஸ்லிம் விவகாரம்) மற்றும் அருட்தந்தை கௌரவ கலாநிதி சிக்டஸ் குருகுலசூரிய (கிறிஸ்துவ மற்றும் கத்தோலிக்க விவகாரம்) ஆகியோர்களுக்கும் இடையில் நேற்று (24/09/2021) விஷேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இச் சந்திப்பின் போது தேசிய இன மத நல்லிணக்கத்துக்கான எதிர்கால வேலைத்திட்டங்களை பற்றி விஷேட கலந்துரையாடல் , பௌத்த மதத்தலைவர்களுடன் இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதத்தலைவர்களுக்கு இடையில் சகவாழ்வு என்ற தொனிப்பொருளில் ஒன்று பட்டு சிங்கள மொழி தெரியாதவர்களுக்கு சிங்கள மொழியை கற்றுக் கொள்வதற்கான விஷேட வேலை திட்டம், ‘ஸ்ரீ லங்கா தேசிய ஒற்றுமைக்கான ஒன்றியம்’ என்ற பெயரில் அமைப்பொன்றை உருவாக்குதல், அதனூடாக தேசிய நல்லிணக்கம் சகவாழ்வு போன்ற பல எதிர்கால வேலைத்திட்டங்கள் முன்னெடுப்பது பற்றிய நீண்ட கலந்துரையாடல்கள் இச்சந்திப்பின் போது நடைப்பெற்றது.இந்த நிகழ்வு கெலனிய,மானல்வத்தயில் அமைந்துள்ள பௌத்த ஆய்வுகளுக்கான நாகானந்தா சர்வதேச நிறுவனத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.