நாட்டில் இதுவரை செலுத்தப்பட்டுள்ள தடுப்பூசிகளின் முழு விபரம்

Date:

நாட்டில் இதுவரை 12,468,949 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.

அதேபோல், 8,169,232 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நேற்றைய தினத்தில் (31) மாத்திரம் 41,166பேருக்கு சீனாவின் சைனோபார்ம் (sinopharm) தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது.

மேலும், சைனோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் நேற்று 442,237 பேருக்கு போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, இதுவரை 885,617 பேருக்கு கொவிசீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளது.

அத்துடன் இதுவரை 159,088 பேருக்கு ஸ்புட்னிக் V தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் 23,797 பேருக்கு ஸ்புட்னிக் V தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளது.

அதேபோல், இதுவரை 306,403 பேருக்கு ஃபைசர் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ள நிலையில், 186,839 பேருக்கு ஃபைசர் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல், 771,656 பேருக்கு மொடர்னா தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ள நிலையில் மொடர்னா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் 674,382 பேருக்கு போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு வௌியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையில் அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டுள்ள சீன பிரஜைகள் 2,865 பேருக்கு சைனோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதுடன் 2,435 பேருக்கு இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

எரிபொருள் விலை உயர்வால் பேக்கரி உற்பத்தி பொருட்கள் அதிகரிக்கும் சாத்தியம்!

தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளை உயர்த்துவதா...

விசேட வைத்திய நிபுணர்களுக்கு மேலதிக எரிபொருள் வழங்க நடவடிக்கை!

தொலைதூரப் பகுதிகளில் இருந்து வருகை தரும் விசேட வைத்திய நிபுணர்களுக்கு மேலதிக...

பேருந்து கட்டண திருத்த முன்மொழிவு இன்று அமைச்சரவையில்!

பேருந்துக் கட்டணங்களை உயர்த்துவதற்கான முன்மொழிவு இன்று (23) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. அண்மைய...

உத்தியோகபூர்வமற்ற பொலிஸ் செய்திகளை நம்ப வேண்டாம்: பொலிஸ் ஊடகப் பிரிவு

இலங்கை பொலிஸாரால் வெளியிடப்பட்டதைப் போன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் ஒரு...