“நான் நாளை பாகிஸ்தான் புறப்படுகிறேன், யாரெல்லாம் என்னோடு வருகிறீர்கள் “_கெய்லின் பரபரப்பு ட்வீட்!

Date:

பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான கடந்த வெள்ளிக்கிழமை (17) தொடர் திடீரென ரத்து செய்யப்பட்டது.பாகிஸ்தானில் பாதுகாப்பு சிக்கல் இருக்கிறது என்பதை காரணம் காட்டி நியூசிலாந்து கிரிக்கெட் சபை போட்டி ஆரம்பமாவதற்கு ஒரு சில மணி நேரங்களுக்கு முன்னதாக ,தொடரை ரத்து செய்த நிகழ்வு இடம்பெற்றது.பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களும், பாகிஸ்தான் கிரிக்கெட் சார்ந்தவர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒரு நிகழ்வாக இந்த நிகழ்வு பார்க்கபடுகிறது.

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அக்தார் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், “பாகிஸ்தான் கிரிக்கெட்டை நியூசிலாந்து கொன்று விட்டது “என பகிரங்கமாக நியூஸிலாந்தை குற்றம் சாட்டினார்.தென்னாபிரிக்கா அணியின் முன்னாள் ஜாம்பவான் ஹேர்ஷல் கிப்ஸ் இந்த நாள் கிரிக்கெட் உலகிற்கு “கருப்பு தினம்” என கடுமையாக தெரிவித்துள்ளார்.இது
இப்படியிருக்க மேற்கிந்திய தீவுகளின் அதிரடி ஜாம்பவான், ஐ.பி.எல் போட்டிகளில் பஞ்சாப் அணியில் இணைந்து விளையாடும் கிறிஸ் கெயில் ஒரு பரபரப்பு டுவீட் இட்டிருக்கிறார்.

‘நான் நாளை பாகிஸ்தான் புறப்படுகிறேன், யாரெல்லாம் என்னோடு வருகிறீர்கள் என பதிவிட்டுள்ளார்.

இதன் மூலமாக பாகிஸ்தானில் பாதுகாப்பு பிரச்சினை இல்லை என்பதையும், பாகிஸ்தானில் சென்று கிரிக்கெட் விளையாடுவது யாருக்கும் சிக்கல் இல்லை என்கின்ற ஒரு தோற்றப்பாட்டை ஏற்படுத்தியுள்ளார் கெயில்.கெயில் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகளிலும் விளையாடி வருபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...