நாளை முதல் மேலும் சில விமான சேவைகள் ஆரம்பம்!

Date:

நாளை முதல் 07 விமான சேவை நிறுவனங்கள் இலங்கைக்கான நேரடி விமான சேவைகளை (DIRECT FLIGHTS) ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இந்த 07 விமான நிறுவனங்களில் 05 நிறுவனங்களின் விமானங்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கான நேரடி விமான சேவைகளை ஆரம்பிக்கவுள்ளன.அவற்றில் ரஷ்யாவின் இரண்டு விமான நிறுவனங்களாகிய AEROFOLT மற்றும் AZUR AIR ஆகியன நாளை (01) முதல் நேரடி விமான சேவைகளை முன்னெடுக்கவுள்ளன.

இத்தாலியின் NEOS விமான நிறுவனம், பிரான்ஸின் AIRFRANCE நிறுவனம், பங்களாதேஸின் US BANGLA AIRLINES நிறுவனம் ஆகியனவும் நாளை முதல் இலங்கைக்கான நேரடி விமான சேவைகளை இயக்கவுள்ளன.அத்தோடு, இஸ்ரேலின் ARKIA விமான நிறுவனமும், சுவிட்ஸர்லாந்தின் SWISSAIR நிறுவனமும் இலங்கைக்கான நேரடி விமான சேவைளை முன்னெடுப்பதற்கு விருப்பம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...