இலங்கையில் நாளொன்றுக்கு சமைத்த மற்றும் சமைக்காத 5,000 மெட்ரிக் தொன் உணவு வீணாக சூழலுடன் சேர்கப்படுவதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
உணவு வீண் விரயமாகுதல் மற்றும் உணவு கழிவாக வீண்விரயமாவதை கட்டுப்படுத்தல் குறித்த சர்வதேச விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு அமைச்சில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் இது தொடர்பாக சுற்றாடல் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
இது பாரிய ஒரு பிரச்சினையாகும். உலகில் உற்பத்தி செய்யப்படும் மக்களின் பாவனைக்கான உணவுப் பொருட்களில் மூன்றில் ஒரு பகுதி வீண்விரயமாவதாக சர்வதேச உணவு மற்றும் விவசாய அமைப்புக்ககளின் தகவல்களில் இருந்து தெரிய வந்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
2030 ஆம் ஆண்டளவில் 30 சதவீதத்தால் உணவு கழிவை கட்டுப்படுத்துவதற்கு இலக்கு நிர்ணயிக்கபட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.