2021ஆம் ஆண்டு 18ஆம் இலக்க நிதிச் சட்டமூலம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் கையெழுத்திடப்பட்டு சான்றுரைப்படுத்தப்பட்டுள்ளது.கடந்த 07ஆம் திகதி இந்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு திருத்தங்களுடன் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஆதரவாக 134 வாக்குகளும், எதிராக 44 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
நிதிச் சட்ட மூலத்தின் இரண்டாவது வாசிப்பின்போது எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியல்ல வாக்கெடுப்புக் கோரியமையால் இந்தச் சட்டமூலம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.இதற்கைமைய இந்த நிதிச் சட்டம் இன்று முதல் (15) நடைமுறைக்குவருவதாக பாராளுமன்ற ஊடக முகாமையாளர் நிம்மி ஹாத்தியல்தெனிய குறிப்பிட்டுள்ளார்