எதிர்வரும் 21 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 76 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியூயோர்க் நகரை சென்றடைந்தார்.
நியூயோர்க் விமான நிலையத்தை சென்றடைந்த ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினரை ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கையின் நிரந்தர பிரதிநிதி மோகன் பீரிஸ் உள்ளிட்ட அதிகாரிகள் அவரவேற்றனர்.