நியூ மெக்சிக்கோவில் 23000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஆதிகால மனிதர்களின் காலடித்தடம்!

Date:

அமெரிக்காவின் நியூ மெக்சிக்கோ மாகாணத்தில் அமைந்துள்ள தி வொயிட் சாண்ட்ஸ் தேசிய பூங்காவில், 23000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஆதிகால மனிதர்களின் கால் தடத்தை நிகழ்கால உலகிற்கு வெளிக்காட்டும் புகைப்படம் ஒன்று காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த படம் எப்போது எடுக்கப்பட்டது என்ற விவரங்கள் பதிவாகவில்லை.

ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் இந்த காலடி தடங்களின் வயது 23000 ஆண்டுகள் இருக்கும் என ஊகித்துள்ளனர். இது நீண்ட நாட்களாக வறண்டு போன ஏரி ஒன்றின் மீது ஆதிகால மனிதர்கள் நடந்து சென்ற போது பதிந்துள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளனர். காலடி தடங்களின் அளவுகளை வைத்து பார்க்கும் போது வளர், இளம் பருவ வயதினர் மற்றும் குழந்தைகள் இந்த பாதையில் அதிகளவில் சென்றுள்ளதாகவும்

இந்த காலத்தின் வயதை அந்த தடங்களில் இருந்த விதைகளை கொண்டு கணக்கிட்டுள்ளதாகவும் மேலும் இது நியூ மெக்சிக்கோ பகுதி என்றும் தற்போது அந்த பகுதி பாலைவனமாக உள்ளதாகவும் இதன் மூலம் ஆதி கால மனிதர்கள் இந்த பகுதியில் வாழ்ந்ததற்கான அடையாளத்தை கண்டுள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...