பஞ்சாப் கிங்ஸ் 5 ஓட்டங்களால் வெற்றி!

Date:

இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் 37 ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 5 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சன்ரைசஸ் ஹைதராபாத் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.இதன்படி, முதலில் துடுப்பாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 07 விக்கட்டுக்களை இழந்து 125 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. 126 ஓட்டங்களை சன்ரைசஸ் ஹைதராபாத் அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

அணிசார்பில் அதிகபடியாக எய்டன் மர்க்ரம் 27 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.பந்துவீச்சில் ஜேஸன் ஹோல்டர் 19 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.இந்நிலையில், 126 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய சன்ரைசஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் நிறைவில் 07 விக்கெட்டுக்களை இழந்து 120 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.அணிசார்பில் அதிகபடியாக ஜேஸன் ஹோல்டர் 47 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். பந்துவீச்சில் ரவி பிஸ்னொய் 24 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களை கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...